|
பொ-ரை: அறியாமையை உடைய நெஞ்சமே! ஆணி போல நீ மிகவும் வலி உடையையாயினும், ஏணியைப் போல் இழிந்தும் ஏறியும் இறங்கியும் வாடுகின்றனை; பிறவிப் பெருங் கடற்குத் தோணியாகிய சோற்றுத்துறையர்க்குப் பூணியாக நின்று பணிசெய்வாயாக. கு-ரை: ஆணி - இருப்பாணி. ஆற்றவலியை - மிக்க வலிமையுடையாய். ஏணிபோல் இழிந்தேறியும் - ஏணியைப் போலத்தான் இருந்த இடத்திலே இருந்து பிறர் இழியவும் ஏறவும் சாதனமாய் நின்றும் கவலைப்படும். இருப்பாணிபோல வலிமையாய் உள்ளதுமான மனம் என முன்னே கூட்டுக. தோணி - பிறவிக்கடலில் இருந்து கரையேற்றும் தோணி போன்றவன். பூணியாய் - அன்புடையையாய். |