|
பொ-ரை: சென்னியில் உச்சியின்மேல் விளங்கும் இள வெண்பிறையும் பற்றியாட்டற்குரிய பாம்பும் சடையின்கண் வைத்தவனும், நெற்றிக்கண்ணனுமாகிய திருநெய்த்தானனைச் சுற்றி வந்து மெய்யால் தொழுவார் ஒளி பொருந்தி வாழ்பவராவர். கு-ரை: உச்சிமேல் விளங்கும் - ஆகாயத்தே விளங்கும். ஆடு அரவு - ஆடும் பாம்பு; ஆடரவொடு வெண்பிறை பற்றிச் சடை பெய்தவன் என்க. நெற்றியின்கண் ஆரழல் கண்ட - ஆரழல் தோன்றும்படி நெற்றியினால் விழித்த. ஊழிக்காலத்தும் உமையம்மை தம் கண்களைப் புதைக்க உலகம் இருண்டகாலத்தும் (தி.4.ப.14.பா.8.) விழித்தான் என்க. அழல் - நெற்றிக்கண்ணை உணர்த்திற்று. சுற்றி - வலம்செய்து. |