|
பொ-ரை: படங்கொண்ட பாம்பை அரையில் ஆர்த்துக் கட்டிய பழனத்தலத்து இறைவனும், உலகத்தினுள்ளார் எல்லாரும் வந்து வணங்கி வலம் கொள்ளுதற்குரிய தலைவனும் ஆகிய பெருமானைச் சில குருடர்கள் அறியார்; சில பொய்யர்கள் வணங்காது வீண் காலங்கள் போக்குவர். கு-ரை: வையம் - உலகம்; அஃது ஆகுபெயராய் மக்களை உணர்த்திற்று. ஐயன் - அழகியவன். ஆதர்கள் - அறிவற்றவர்கள். பைகொள் ஆடரவு - படத்தைக் கொண்டு ஆடுகின்ற பாம்பு. ஆர்த்த - கட்டிய. பழனன்பால் - திருப்பழனத்திறைவரிடத்து. அன்பு கொள்ளாதென வருவிக்க. பொய்யர் - பொய்ப்பொருள்களைப் பின்பற்றுகின்றவர்கள். காலங்கள் போக்கிடுவார்கள் - வறிதே காலங்களைக் கழிப்பார்கள். |