|
பொ-ரை: செம்பொன்பள்ளி இறைவர். திரிகின்ற மும்மதில்களைச் செங்கணை ஒன்றினால் எரியுமாறு எய்து அனலினால் ஓட்டி, இராவணன் நெரியுமாறு தம் திருவிரல் ஒன்றால் ஊன்றியவர்; தம்மையடைந்த அன்பர்க்கு அரிதாகிய வீட்டுலக இன்பத்தை அப்பெருமான் அருள்வர். கு-ரை: செங்கணை - கூரியநேரிய கணை. அனலோட்டி - அக்கினிதேவனாகிய கணையை ஏவி. அரியவானம் - கிடைத்தற்கரிய வீடுபேறு. ஒன்றினால் - ஒன்றின்கண் வைத்து. அனல்செங்கணை ஒன்றினால் ஓட்டி எரிய எய்து எனக் கூட்டுக. |