பாடல் எண் : 36 - 2
என்பு மாமையும் பூண்டங் குழிதர்வர்க்
கன்பு மாயிடும் ஆயிழை யீரினிச்
செம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை
நம்பொன் பள்ளியுள் கவினை நாசமே.
2
பொ-ரை: எலும்பும், ஆமையும் அணிந்து திரிதருகின்ற செம்பொன்பள்ளி இறைவனும் சிவலோகனுமாகிய பெருமானை அன்பு செய்யும் ஆராய்ந்த இழையை அணிந்த பெண்களே! அப் பெருமானை நம் அழகிய மனக்கோயிலின்கண்ணே நினைந்தால் நம் வினைகள் நாசமாகும்.
கு-ரை: என்பும் - எலும்பு மாலையும். ஆமையும் - கூர்மாவதாரமாகிய ஆமையின் ஓட்டையும். பூண்டு - அணிந்து - 'முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு' (தி.1.ப.1.பா.2.)) உழிதர் வர்க்கு - திரிபவர்க்கு. ஆயிழையீர் - சிறந்த நூல்களை ஆராயும் இயல்பினீர். பொன்பள்ளி - பொற்கோயில். நம்பொன்பள்ளி உள்க - அழகிய நமது உள்ளக்கோயிலில் நிறுத்தி உள்க.