|
பொ-ரை: செம்பொன்பள்ளி இறைவர் நன்மை மிக்க நாரணனும், பிரமனும் ஆகிய இருவரும் நிலைபெற்ற திருமுடியையும் திருவடியையும் காணத்தொடங்கிச் சென்றும் காண்டலரியவராய் நின்ற அச்சூழ்நிலையில் நீண்டு அழலுருவாயினர். கு-ரை: நன்றி - நன்மையையுடைய. பிரமன்போலப் பொய் கூறாமையின் நன்றி நாரணன் என்றார். நீள் எரியாகிநின்ற சூழலில் நீள்முடியோடு அடி காண்புறச் சென்று காண்பறியானென்க. |