|
பொ-ரை: ஞானமாகிய நன்குணரத்தக்க ஆனையார்; உடற்பொதியைமேவுமாறு உருக்கி உள்ளொளிபெருக்கும் ஆனையார்; ஆனையை உமாதேவியார் அஞ்சுமாறு உரித்த கடவூர்த் தலத்து இறைவர்; கானல் ஆனையும் போல்வர்; காண்பீர்களாக. கு-ரை: ஞானமாகிய நண்குணர் - அறியவேண்டுவரை பலவற்றையும் நன்கு உணர்ந்தவராகிய. ஊனை - உடலை. வேவஉருக்கிய - கருவி கரணங்களை அன்புமயமாகச் செய்த. வேனல் ஆனை - சினமுள்ளதாய் வந்த யானை. கான் அல் யானை - காட்டில் திரிதல் இல்லாத நல்ல யானை. உமையஞ்ச உரித்த கடவுளர் என முடிக்க. உரித்த உமை பெயரெச்சத்தகரம் தொக்கது. |