|
பொ-ரை: நஞ்சினை உண்டும் அழகுபெற்ற ஆனையார்; நீல மேனியை ஒருபாகத்தே உடைய நீண்ட பளிங்கனைய ஆனையார்; கொழுவிய சுடர்விடும் கோலம் உடைய ஆனையார்; கடவூர்த் தலத்திறைவர் கால ஆனை போல்வர்; காண்பீர்களாக. கு-ரை: ஆலம் - விடம். ஆலமுண்டு அழகைப் பெற்ற என்க. அழகாயதொரானையார் - அழகியதொரு யானை போன்றவர். நீல மேனி - பார்வதி அல்லது திருமாலின் திருவுரு. பளிங்கானையார்- வெண்ணீறணிந்து வெள்ளியராய் விளங்குபவர். கோலமாய் - அழகியராய். கொழுஞ்சுடர் ஆனையர் - மிக்கஒளியாய் விளங்கும் இயல்பினர். கால ஆனை - காலனுக்கு ஆனைபோன்றவர். காலனை அழித்தவர். |