|
பொ-ரை: சினக்கின்ற செம்பவளத் திரள்களை உடைய ஆனையார்; மனத்தின்கண் நிறைந்த வல்வினைகளைத் தீர்க்கும் ஆனையார்; அன்னைக்கும் மேலாகிய அன்புடையார் மனத்து உறையும் ஆனையார்; கடவூர்த்தலத்து இறைவர் ஒலித்து முழங்கி வரும் ஆனைபோல்வர்; காண்பீர்களாக. கு-ரை: சினக்கும் - சிவக்கும். திரள் - திரள்போன்ற. மனக்கும் - மனத்தின்கண். அனைக்கும் - அன்னையினும். கனைக்கும் - அடியார்களைத் தன்பால் அழைக்கும். |