|
பொ-ரை: வேதங்களாய் அதன் ஒளியாய் விளங்கும் ஆனைபோன்றவர். நீதிமுறை விளங்க நிலத்தின்கண் தோன்றியவர் என்க. வேதங்களை ஓதி பல ஊழிகளையும் கண்டறிந்தவர். அன்பர்க்கன்பர் கடவூர் இறைவர்; காண்பீர்களாக. கு-ரை: வேதமாகிய ஆனையார், வெஞ்சுடர் ஆனையார் என்க. நீதியால் - கடமையாக. நிலனாகிய - நிலமாக விளங்கிய; நிலத்தின்கண் திருமேனிகொண்டு தோன்றிய என்றுமாம். ஓதி - வேதமோதி. ஊழிதெரிந்துணர் - பல ஊழிகளையும் தெரிந்து உணர்கின்ற. |