|
பொ-ரை: கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், தம்மை உன்னித் தேவர்கள் ஓதும் போது அவர்சிந்தையில்கன்னல் போன்றும் தேன் போன்றும் இனிப்பவர்; தம்மை நோக்கித் தொழுது எழும் அடியவர்கட்கெல்லாம் 'பிறகு அருள்செய்வோம்' என்னாது அப்போதே அருளும் பெருங்கருணை உடையவர். கு-ரை: உன்னி - சிந்தித்து. ஓதிய - புகழ்ந்த கடவூர் மயானத்தார் என்க. அல்லது உன்னி ஓதிய வானவர் சிந்தையில் என மாற்றிப் பொருள் கூறுக. கன்னல் - கரும்பு . பின்னை - பிறகு என்னாது; உடனே அருள் வழங்குபவர் என்க. அன்றி வானவர் உன்னி ஓதிய மயானத்தார் எனலுமாம். |