|
பொ-ரை: கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், தேவர்கள் தொழுகின்ற பைங்கழலை உடைய இறைவர்; வீரம் உடையவர்; அறமே வடிவானவர்; அடியார்களின் பிறவி நோயைத் தீர்ப்பவர். கு-ரை: பைங்கழல் - பைம்பொன் கழல். மறவனார் - வலியர். அறவனார் - அறவடிவினர். இவற்றிற்கு மறக்கருணை செய்பவர், அறக்கருணை செய்பவர் எனலுமாம். |