|
பொ-ரை: திருநீறணிந்தவனும், நிமிர்தலுற்ற பொலிவுற்ற சடையினனும், விடையாகிய ஏற்றினை உடையவனும், நம்மை ஆளுடையவனும், புலன்களின் நெறியை மாற்றியவனுமாகிய மயிலாடுதுறை என்று போற்றுகின்ற அடியார்கட்குத் துயரம் மிகுந்த இவ்வுலக வாழ்க்கை உன்டோ? கு-ரை: நிமிர் - நீண்ட. புன் - மெல்லிய. புலன் மாற்றினான் - ஐம்புல அவாவை நீக்கியவன். புவி வாழ்க்கை - மண்ணுலக வாழ்க்கை; பிறப்பு எனினுமாம். |