|
பொ-ரை: இவள், "தலைவனே! அழகனே! தழலை ஏந்திய கரத்தவனே! திருநீலகண்டனே! மேகங்கள் உலாவுகின்ற பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம் அழகியவனே! நன்மை தீமைகளை விதிப்பவனே! அருள்வாயாக!" என்று கூறுகின்றாள். கு-ரை: மையுலாம் - அடர்ந்து செறிந்திருத்தலால் கருமை உலாவும். ஐயனே அருள் விதியே என மாற்றுக. விதியே - இது முறையேயாகும். அழகே அனலேந்திய - அழகிதாக அனலை ஏந்திய எனலுமாம். |