|
பொ-ரை: இவள், அன்பர்கட்கு அமுதாயுள்ள மேலானவனை, முத்தியை அளிப்பவனை, முடிவு ஒன்று இல்லாத மூர்த்தியை, தலைவனை, அழகு நிரம்பிய கழிப்பாலையில் வீற்றிருப்பவனாகிய என் சித்தத்தவனைச் சென்று சேருமாறு ஒரு நெறி எனக்குச் செப்புவீர்களாக!" என்கின்றாள். கு-ரை: அமுதாய - அமுதம் போன்றவனாகிய. பரத்தினை - மேலானவனை. செப்பும் - சொல்வீராக. சித்தன் - எல்லாம் செய்யவல்லவன்; சின்மயன் என்றுமாம். |