|
பொ-ரை: திருமாலும் பிரமனும் தம்மிலே ஒன்றித் தேட முற்பட்டும் திருவடியும் திருமுடியும் நின்ற சூழல் அறிய அரியவனாய் விளங்கிய பெருமான் வீற்றிருக்கும் இடம், பூதங்கள் சென்று ஏத்துகின்ற பைஞ்ஞீலியாகும். இத்தலத்திலேயே அடிகள் என்றும் மேவியிருப்பது. கு-ரை: ஒன்றி - கூடி. தம்மிலே ஒன்றி எனமாறுக. நின்றசூழல் - அளவுபட்ட நின்ற இடம். அறிவரியான் - அறிதற்கரியவன். பார்இடம் - பூமியாகிய இடம் எனலுமாம். இடம் சென்று - எழுந்தருளியிருக்குமிடத்திற் சென்று, அடிகள் அறிவரியான் என்க. |