|
பொ-ரை: வேழத்தின் தோலை உரித்துப் போர்த்த விகிர்தரும், செஞ்சடைமேல் தாழுமாறு பிறை வைத்தவரும், தாழைகள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த பைஞ்ஞீலித் தலத்து உறைபவரும் ஆகிய பெருமான் யாழ்க்குப் பொருந்திய பாடலை உகந்த அடிகள் ஆவர். கு-ரை: உரி - தோல். விகிர்தன் - வேறுபாடுடையவன். தாழதங்க - யாழின் பாடலை உகத்தலாவது - ஒடுக்கிய உயிர்கள் மீளத்தோன்ற எழுப்பும் நாதமுழக்கம். |