|
பொ-ரை: வேட்களத்துறையும் வேதியனும், எம் இறைவனும், திருநீலத் திருமிடறு உடைய தலைவனும் ஆகிய பெருமான் விடையுகந்து ஏறுவர்; பஞ்சகவ்வியம் ஆடுவர்; பூக்களைக்கொண்டு திருவடி போற்றினால் நம்மைக் காப்பர். கு-ரை: எம் இறை - எங்கள் தலைவன். ஆக்கள் ஏறுவர் - விடை ஏறுவர். ஆனைஞ்சு - பஞ்சகவ்வியம். ஆடுவர் - அபிடேகம் கொள்வர். மிடறு - கழுத்து. |