|
பொ-ரை: நம்மவராகிய திருநீலகண்டனும், என் பொன்போன்றவனும் ஆகிய இறைவன் உறைகின்ற திருவேட்கள் நன்னகரில் இன்பமே வடிவாகிய அவன் சேவடியை ஏத்தியிருப்பதனால். இனித் துன்பமும் இல்லை; துயரங்களும் இல்லை.கு-ரை: துன்பம் - பிறவித்துன்பம். துயர் இல்லையாம் - ஏனைய துன்பங்கள் இல்லையாகும். இனி - இனி நாம் செய்ய வேண்டுவது. நன்மணி கண்டனார் - நல்ல நீலமணிபோலும் கழுத்தையுடையவர். என்பொனார் - எனக்குப் பொன்னாயிருப்பவர். சேவடி - சிவந்த திருவடி. இருப்பது இன்பச்சேவடி ஏத்தி; அதனால் இனித் துன்பமில்லை துயரில்லை என முடிக்க. |