|
பொ-ரை: வளம் நிறைந்த தோள்களை உடைய இராவணன் ஆற்றலை விரைந்து ஒழித்த பெருமான் உறைகின்ற பதியாகிய நல்ல நல்லம் என்னும் பெயரை நாவினால். சொல்லும் வல்லமை உடையவர்கள் தூயநெறியிற் சேர்வர். கு-ரை: மல்லை மல்கிய - வலிமை நிரம்பப் பெற்ற, ஒல்லையில் - விரைவில். பதி - தலத்தினுடைய; நல்லம் நல்லம் என்று சொல்பவர் தூய வீடுபேற்றை அடைவர். |