முகப்பு |
தொடக்கம் |
|
பாடல் எண் : 43 - 6 |
அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும் வல்ல வாறு சிவாய நமவென்று நல்லம் மேவிய நாத னடிதொழ வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.
|
|
|
6 |
|
பொ-ரை: ஐம்பெரும் பூதங்கள் துன்பங்கள் உண்டாக ஆட்டினாலும், திருநல்லத்தில் எழுந்தருளியுள்ள நாதன் திருவடிகளை வல்லவாறு ழுசிவாயநம" என்று தொழுதால். வெல்லுதற்கு வந்த வினைகளாகிய பகை கெடும்.கு-ரை: அல்லலாக - துன்பம் உண்டாக. வல்லவாறு - இயன்ற அளவு. வீடும் - அழியும். |
|
|