|
பொ-ரை: வண்டுகளின் ஒலி பொருந்திய மலர்களைத் தூவி நம்மை ஆளுடையானாகிய பெருமான் உறையும் திருநல்லத்தினைத் தொழுவீர்களாக; தொழுதால் வெப்பம் பொருந்திய வினைக்கடலினின்றும் நீங்கி நீர் செம்மையாகிய சிவகதியினைச் சேரலாம். கு-ரை: வெம்மையான - கொடியதான. வினைக்கடல் - இருவினைப்பரப்பு. "செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையுமன்றே" (தி.4.ப.76.பா.2) என்றார் முன்னும். |