|
பொ-ரை: ஆகாயத்தே இருளைச்சிதைக்கும் மதியை அரவொடும் அஞ்சாதபடி நட்புக் கொள்ள வைத்தவர். தேன் முதலிய பஞ்சாமிர்தத்தொடும் இளநீர் பஞ்சகவ்வியம் முதலியவற்றை அபிடேகம் கொண்டவர் ஆமாத்தூர்ப்பெருமான். கு-ரை: வானம் - ஆகாயத்தே. சாடும் - இருளைச் சிதைக்கும். தானஞ்சாது - மதியும் அரவும் தம்முள் கொண்ட பகைபற்றி அஞ்சாதபடி. உடன் - ஒருசேர. தேன் அஞ்சு - தேன் முதலிய அஞ்சு; பஞ்சாமிர்தம். ஆனஞ்சு - பஞ்சகவ்வியம். தெங்கிள நீரொடும் ஆடிய ஐயன்; ஆனஞ்சாடிய ஐயன் என்க. |