|
பொ-ரை: எம்மை ஆளுடைய இறைவன், திருநீற்றினால் நிறைந்த திருமேனி உடையவனும், நேரிழையை ஒரு கூற்றில் உடையவனும், அழகு நிறைந்த குழலாகிய சடையில் ஓர் ஆறாம் கங்கையை உடையவனும் ஆகிய அழகு நிறைந்த ஆமாத்தூரில் விரும்பியெழுந்தருளிய இடப வாகனத்தை உடையவன் ஆவன். கு-ரை: நீற்றினார் - திருநீறு பொருந்திய. நேரிழை - பார்வதி. குழல் - தலைமயிர். கோலம் - அழகிய. குழல் அம்மை பாகத்து முடியாகக்கொண்டு. குழல்கோலமாகக் கலந்த சடை எனலுமாம். ஆற்றினான் - கங்கை ஆற்றை உடையவன். |