|
பொ-ரை: என் பெண்கொடியாகிய மகள், தன் தொல்லைகளால் உழந்து இசைபாடிய இராவணனாகிய கரிய அரக்கனது தீய செயலை அடக்கிய தோணிபுரத்து இறைவராகிய அட்டமூர்த்திக்கு அன்புகொண்டவளாகித் தன் விருப்பத்திற்கு உரியனவற்றைச் செய்பவளாயினள். கு-ரை: இட்டமாயின - தனக்கு விருப்பமானவற்றையே. கட்டம் - வீண் வார்த்தைகளாகிய செருக்குமொழி. காரரக்கன் - கரிய நிறம் பொருந்திய அரக்கன். துட்டடக்கிய - துட்டத்தை அடக்கிய. அட்டமூர்த்திக்கு - எட்டு வடிவமாய் இருக்கின்றவனுக்கு. அன்பதுவாகி - அன்புடையவளாகி. |