|
பொ-ரை: கெண்டைமீன் போன்ற கண்ணை உடைய இமவான் மகளாகிய வண்டுகள் செறிந்த நீண்ட குழலாள் உடனாக உறையும் வெள்ளிய பிறைமதி அணிந்த தோணிபுரத்து இறைவரைக் கண்டு இப்பெண் காமுறுகின்றனள். கு-ரை: கெண்டை - சேல்கெண்டை என்னும் மீன். நயனத்து - கண்களை உடைய. இமவான் மகள் - பார்வதி. வண்டுவார் குழல் - வண்டுகள் மொய்க்கும் மலர் நிறைந்த நீண்ட குழல். உடனாக - சமேதராக. துண்டவானபிறை - சிறிதாகிய வெள்ளிய பிறை. தோணி புரவரை - பார்வதியொடு கண்டும் என உம்மைவிரித்துப் பொருள் கொள்க. |