|
பொ-ரை; முல்லையரும்புகளைப் போன்ற ஒளிச் சிரிப்பையும் வண்டுகள் மொய்க்கும் கூந்தலையும் உடைய நங்கையே! கனிகள் உடையதாகிய பொழில் சூழ்ந்த பழைய தோணிபுரத்து இறைவர்க்கு நீ நல்லவளாகின்றனை; ஆயினும் உனக்கு அவன் அல்லனாவதனை நீ அறிந்திலை. கு-ரை: மொய்குழலாய்-செறிந்தகூந்தலை உடையவளே! அல்லனாவது - உன்னைஏற்றுக்கொள்ளாது அயலானாயிருப்பதை. அறிந்திலை - அறியவில்லை. கனித்தொல்லையார் பொழில் -கனிகளோடு கூடிய சோலை தொல்லைத் தோணிபுரம் என்க. நல்லையாயிடுகின்றனை - நல்லவளாய் அவன்மேல் அன்புகொண்டு ஒழுகுகின்றாய். |