|
பொ-ரை: மேகம் போன்ற கரிய யானையின் தந்தங்களைப் போன்ற தனங்களை உடையவர் காதலித்துச் செல்ல அவர்பின் யானும் சென்று காதலிக்க அவர் அழகில் ஈடுபட்டு அடிமையேன் ஆயினேன். கு-ரை: மாகம் - மேகம்; மேகம்போன்ற கரிய யானை என இயைக்க. மருப்பேர்முலை - தந்தங்களை ஒத்த தனங்கள். போக - பல பெண்களும் காதலித்துப் பின்செல்ல. யானும் - தோழியாகிய யானும். அவள் - தலைவி. புக்கதேபுக - செல்லும் வழியிலேயே செல்லுதலால். யானும் - அவர்க்கு இனி ஆளதே ஆக. நானும் அப்பெருமானழகில் ஈடுபட்டதால் அடிமையேன் ஆயினேன் என்க. |