|
பொ-ரை; அடியார்கள் நாள்தோறும் நசை உடையவராய் நயந்து தொழவும், உமைநங்கையார் இச்சையால் வழிபடவும் கண்டு,செறிந்த இனிய பொழில்களை உடைய கச்சியேகம்பத்தினை நீங்களும் கைகளாற் றொழுவீர்களாக. கு-ரை; நச்சி-அன்புகொண்டு, நாளும்-நாடோறும். நயந்து-விரும்பி. இச்சையால்-ஆசையால். உமைநங்கை-காமாட்சி. கொச்சையார் குறுகார்-அறிவில்லாதவர்கள் சென்றடையார். இத்தலத்துக் காமாட்சி வழிபட்டதைக் குறித்தது இரண்டாவது தொடர். |