|
பொ-ரை; கச்சியேகம்பத்து இறைவன், மெய், வாய், கண், மூக்குச் செவியாகி வந்து ஆக்கிய நும்புலன்களினாலாய கட்டினை அவிழ்த்தருளித் தன் திருக்கண்களால் நம்மை நோக்குவான்; நோய்களை உண்டாக்கும் வினைகள் நம்மிடத்து வாராமற் காக்கம் நாயகன் ஆவன். கு-ரை; மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளும் இங்குச் சொல்லப்பட்டன. ஆக்கும்-வினையை உண்டாக்குகின்ற ஐவர்தம்-ஐம்பூதங்களினுடைய. ஆப்பு-கட்டு. அவிழ்த்து - பந்திக்காமல் நீக்கி. அருள்-அருட்பார்வையால். நமை- நம்மை. நோய் - துன்பம். அவிழ்த்து நம்மை நோய்வினை வாராமே அருள நோக்குவான் எனக் கூட்டுக. |