|
பொ-ரை; திருநீலகண்டனும், எட்டுத்தோள்களை உடைய இறைவனும், முக்கண்ணினனும், வேதம் ஓதும் நாவினனும், தேவர்களுக்கெல்லாம் ஆதியானவனும் ஆகிய பெருமான் உறைகின்ற பூம்பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம்பத்தை நெறியினாற் சென்று முந்துறத்தொழுவோமாக. கு-ரை; ஆதி- தலைவன். முறையால்-வழிபாட்டு முறையினால். தொழுதும் வணங்குவோம். முந்தி - விரைந்து. |