பாடல் எண் : 48 - 8
ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடும்
சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே
நீல மாமிடற் றண்ணலே கம்பனார்
கோல மாமலர்ப் பாதமே கும்பிடே.
8
பொ-ரை: நெஞ்சமே! ஒலிக்கின்ற பெரிய மயில்போலும் சாயலை உடைய பெண்களோடும் நீ மிகுந்து கொண்ட மயக்கத்தைத் தவிர்வாயாக; நீலமாகிய பெருமைமிக்க கழுத்தினை உடைய அண்ணலாகிய ஏகம்பனாருடைய கோலமிக்க மலர்ச் சேவடிகளைக் கும்பிட்டு உய்வாயாக.
கு-ரை: ஆலும் - ஆடும். சாயல் - தோற்றப்பொலிவு. நீசாலஉறும் மால்தவிர் என்க. சால -மிகவும்.உறும்-கூடுகின்ற.நீஉறும் மால்தவிர் நெஞ்சமே - மனமே நீ அடையும் மயக்கத்தை விடுவாயாக. கோலம்-அழகிய