|
பொ-ரை: அறிவைப்பற்றியிருக்கும் பற்று இல்லாத படி செய்தற்பொருட்டு அயிராவணத்தை உடைய பெருமானை நினைமின். இராவணனைக் கால்விரலால் ஊன்றி அருள்செய்த அகோர முகத்தினரின் திருவெண்காட்டை அடைவீராக. கு-ரை: மாமதிபற்று இராவணம் செய - அறிவைப் பற்று இல்லாதபடி செய்தற்பொருட்டு, உள்குமின் எனக் கூட்டுக. ஐராவணம் என்பது ஐயிராவணம் என வந்தது. நான்காம் அடியில் இராவணன் என்பது கரிய நிறமுடையவன்; அகோர முகத்தினர் எனப் பொருள் தரும், உமையை ஒருபாகத்துடைமைபற்றி இவ்வாறு கூறினார். |