|
பொ-ரை: நெஞ்சே! தன்னால் நோக்கப்படும் அடியார்கள் நாவினில் அருள் தேன் பாயுமாறு நோக்கும் திருவெண்காட்டை அடைவாயாக! உலகீர்! உடல் நோக்கிய சிற்றன்பங்களைவிரும்பி உழலாது. வான்நோக்கும் வழி எதுவோ அதில் நிற்பீர்களாக. கு-ரை: ஊனோக்கும் இன்பம் - உடலைக் கருதிய இன்பங்கள். வேண்டி - விரும்பி. உழலாதே - வருந்தாதே. வானோக்கும் வழி - பேரின்பவீட்டைக் கருதும்வழி; வழியாவதில் நின்மின் என்க. தானோக்கும் - தன்னால் நோக்கப்படுகின்ற என்றாயது. தேன் நோக்கும் - தேனாயுள்ள பெருமானால் விரும்பப்படுகின்ற. |