|
பொ-ரை: நெஞ்சே! உயிர்களாற் பற்றத்தக்கவனும், கங்கை, பாம்பு, பிறையுடன் உற்றவனும் சடையினனும், உயர்ஞானங்கள் கற்றவனும், கீழ்மைக்குணமுடையார் புரங்களை ஓரம்பாற் செற்றவனும் ஆகிய பெருமான் உறையும் திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக. கு-ரை: பற்றவன் - எப்பொருட்கும் சார்பாயிருப்பவன். கயவர் - அசுரர். உயர் ஞானங்கள் கற்றவன் - கலைஞானங்களை இயல்பாயுணர்ந்தவன். |