பாடல் எண் : 49 - 6
கூடி னானுமை யாளொரு பாகமாய்
வேட னாய்விச யற்கருள் செய்தவன்
சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
காட னாரடி யேயடை நெஞ்சமே.
6
பொ-ரை: நெஞ்சமே! உமையாளை ஒருபாகமாய்க் கூடியவரும், விசயற்கு வேடனாய் அருள்புரிந்தவரும். உயர்ந்த சிவனாரும் ஆகிய அன்பானினைவார் சிந்தையில்மேவிய திருவெண்காடனாரின் திருவடியே அடைவாயாக.
கு-ரை: உமையாளொரு பாகமாய்க் கூடினான் என்க. விசயன் - அருச்சுனன். சேடனார் - பெருமையுடையவர். சிந்தை மேய வெண் காடனார் - சிந்தையின்கண் எழுந்தருளிய வெண்காடனார்.