|
பொ-ரை: நெஞ்சே! கங்கை, பாம்பு, மதி ஆகியவற்றை ஒருங்கு தாங்கியவனும். முறுக்குண்ட புன்சடையுடையவனும். கீழவர் புரங்களை எரித்தவனும், நான்கு மறைகளையும், ஆறங்கங்களையும் விரித்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருவெண் காட்டை அடைந்து வழிபடுவாயாக. கு-ரை: கங்கை, பாம்பு இவற்றை மதியுடன் தரித்தவன் என்க. புரிந்த - கட்டிய அல்லது முறுக்கிய. புன்சடை - மெல்லிய சடை. |