பாடல் எண் : 5 - 5
தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர்
ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.
5
பொ-ரை: தேடிச்சென்று அப்பெருமான் திருவடிகளை ஏத்து வீராக; அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மை அவரும் நாடிவந்து ஆட்கொள்வர்; ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைதொழுதால் நமது நிகழ்வினைகள் ஓடிப்போகும்.
கு-ரை: தேடிச்சென்று - அவன் இருக்குமிடமாகிய அண்ணாமலையைத் தேடிப்போய். திருந்தடி - மாறுதலின்றிச் செம்பொருளாக உள்ள திருவடிகள். ஏத்துமின் - புகழ்ந்து போற்றுங்கள். நாடிவந்து - நம்மைத் தேடிவந்து. நம்மையும் - உம்மை இழிவு சிறப்பு.