|
பொ-ரை: பன்றி வடிவாகச் சென்று தோண்டியும் தீண்டுதற்கரிய திருவடியின்கண் அமைந்த திருவிரல் ஒன்றினால் அரக்கனை மீண்டு அருள்புரிவதற்கும் மிதித்தவராகிய பெருமானை வேண்டிக் கொண்டேன்; திருவாய்மூர் விளக்கினைத் தூண்டிக்கொள்வேன் நான் என்றலும் தோன்றி அருள்புரிந்தான். கு-ரை: தீண்டற்கரிய திருவடி - திருமால் முதலிய தேவர்களாலும், வேதங்களாலும் தீண்டுவதற்கரிய திருவடி. மீண்டற்கும் மிதித்தார் - அத்திருவடியால் ஆணவம் அழிப்பதற்கேயன்றி அவன் உய்தற்கும் மிதித்தார் என்க. கொள்வன் - பயன்கொள்வேன். என்றலும் - என்று நினைத்தவுடன். தோன்றும் - வெளிப்படுகின்றான். |