|
பொ-ரை: எம்பெருமானையே நினைந்து, நினைந்து உறங்குகின்ற எளியேனுக்கு நிலைபெற்ற பெருமை உடைய மறைக்காட்டுறையும் மணவாளனார் தன்னை வாய்மூர் இறைவனாமாற்றை விளங்கக்கூறி என்னை அங்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்னை கொல்? கு-ரை: மன்னும் - நிலைபெற்ற. மா - சிறந்த. மணவாளனார் - மணவாளக் கோலத்தோடு வீற்றிருக்கும் இறைவர். உன்னி உன்னி - அப் பெருமானையே இடைவிடாதெண்ணி. தன்னை வாய்மூர்த்தலைவன் என்று சொல்லி என்க. ஆமா - ஆமாறு. |