|
பொ-ரை: திருப்பாலைத்துறையர், நீலமாமணி போலும் திருக்கழுத்தினர்; நீண்ட சடையில் அழகுமிக்க பெரிய மதியையும் கங்கையையும் கூடவைத்தவர்; சூலம், மான், மழு ஏந்தித் தம் ஒளி முடியில் பாலும் நெய்யும் திருவபிடேகம் கொள்வர். கு-ரை: நீலமாமணி கண்டத்தர் - பெரிய நீலமணி போன்ற நஞ்சு பொருந்திய கழுந்தையுடையவர். கோலமாமதி - அழகிற் சிறந்த சந்திரன். கூட்டினார் - சேரவைத்தார். |