|
பொ-ரை: திருப்பாலைத்துறையர், வெவ்விய கண்ணை உடைய வாளரவை ஆட்டி அச்சுறுத்துவர்; அடியார்க்கு அருள் வழங்குபவர்:செங்கண்ணை உடையமாலும் அயனும் தேடற்கு அரியவர்; பைங்கண்ணை உடைய இடபத்தை வாகனமாக உடையவர். கு-ரை: வெங்கண்-கொடிய கண், வாள் அரவு-ஒளி பொருந்திய பாம்பு ஆட்டி - ஆடச்செய்து. வெருட்டுவர்-தோற்றத்தால் அச்சம் விளைவிப்பவர். அங்கணார்-அழகிய கருணை பொருந்திய கண்களை உடையவர். |