பாடல் எண் : 51 - 11
உரத்தி னாலரக் கன்னுயர் மாமலை
நெருக்கி னானை நெரித்தவன் பாடலும்
இரக்க மாஆருள் செய்தபா லைத்துறை
கரத்தி னால்தொழு வார்வினை யோயுமே.
11
பொ-ரை: தன் ஆற்றலினால் இராவணன் உயர்ந்த திருக்கயிலாய மாமலையை நெருக்கலுற்றானை நெரித்து,அவன் பாடலும் கேட்டு இரக்கமாக அருள்புரிந்த திருப்பாலைத்துறையைக் கரங்களால் தொழுவார் வினை நீங்கும்.
கு-ரை: உரத்தினால்-வலிமையினால். உயர்மாமலை-உயர்ந்த கயிலைமாமலையினால். நெருக்கினானை-மலைமகளை அஞ்சச் செய்தவனை நெரித்து-ஊன்றி கரத்தினால் -கைகளால்,