|
பொ-ரை: திருப்பாலைத்துறையர், மின்னலையொத்த நுண்ணிடையை உடைய கன்னிப்பெண்கள் எங்கும் பலராய்க்கூடிக் காவிரியில் நீராடிப்போற்றித் திருவடிகளைத்தொழ நிலைபெற்று, நான்கு வேதங்களும் பல கீதங்களும் பன்னிய சிறப்புடையவராவர். கு-ரை: மின்னின் - மின்னல்போன்ற. மிக்கு - மிகுதியாக. மன்னி - நிலைபெற்ற. பல்கீதமும் - பல்வகை இசைப்பாடல்களையும். பன்னினார் - சொன்னார். |