பாடல் எண் : 51 - 4
நீடு காடிட மாய்நின்ற பேய்க்கணங்
கூடு பூதங் குழுமிநின் றார்க்கவே
ஆடி னாரழ காகிய நான்மறை
பாடி னாரவர் பாலைத் துறையரே.
4
பொ-ரை: திருப்பாலைத்துறையர், சுடுகாடே இடமாய் நீண்டு நின்ற பேயின் தொகுதிகளும், கூடிய பூதங்களும் தம்மில் இணைந்து நின்று ஆர்க்குமாறு ஆடியவர்; அழகாகிய நான்மறை பாடியவர்.
கு-ரை: நீடு - பெரிதாய் நீண்ட. காடு - இடுகாடு. இடமாய் - ஆடுமிடமாக. கூடு - பேய்க்கணங்களுடன் கூடுகின்ற. குழுமி - சேர்ந்து. ஆர்க்க - ஆரவாரிக்க.