|
பொ-ரை: நறுமணமுடைய கங்கை படரும் செஞ்சடை உடைய திருப்பாலைத்துறையர், தம்மைத்தொடரும் தொண்டரைத் துன்பங்கள் தொடர்ந்து வந்து வருத்தும்போது அரனாகத் தோன்றி அருள்செய்பவர்; கடலினின்றெழுந்த நஞ்சினை உண்டு அணிசெய்யப் பெற்ற திருக்கழுத்தினர். கு-ரை: தொடரும்-தன்னைத் தொடர்ந்து பற்றிய. துக்கம்-துன்பம். அடரும்போது- வருத்துமபோதில். அரனாய்-அத்துன்பத்தை அழிப்பவனாய். கடி-விளக்கம் அல்லது மணம். புனல் -கங்கை. படரும் -பரவியிருக்கும். |