|
பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர், நல்லவர்; நல்லதோர் நாகத்தைக் கையிற்கொண்டு ஆட்டுவர்; வல்வினைகளைத் தீர்க்கும் மருந்துகள் அளிக்க வல்லவர்; பல்லில்லாத ஓடு கையேந்திப் பலி திரிகின்ற அருடசெல்வர் ஆவர். கு-ரை: நல்லர்- நன்மையுடையவர், ஆட்டுவர் - ஆடச் செய்பவர்; வல்வினை தீர்க்கும் மருந்துகள் வல்லர் என்க. வல்வினை-வலியதாகிய பழவினைகள், மருந்துகள் வல்லர்-பாவினைகளாகிய நோய் தீர்க்கும் அருட்செயல்களில் வல்லவர். போல்-அசை. செல்வர்-உலகமெல்லாம் தம் உடைமையாகக் கொண்டவர். |