|
பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் அலைகள் பொருந்திய கடலின் விடம் உண்டவர்; அயன் தேவர்களாதியாகிய உலகங்களுக்கெல்லாம் ஆதியாயவர்; உடையொரு பாகர்; மழுவினை வலக்கையில் ஏந்திய நாதர் ஆவர். கு-ரை: ஒதம்-அலை ஆர்-பொருந்திய; அயனோடு அமரர்க்லெ்லாம் ஆதியார் என்க. ஆதியார்-முதலானவர். அயன்-பிரமன். வலன்-வலது திருக்கரம். போல் -அசை. |