|
பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் மானை ஏந்திய கையை உடையவர்; குற்றமற்ற அறிவொளியாயவர்; உலகிற்கெல்லாம் ஆதி யாயவர்; தம் திருநாமமாகிய அஞ்செழுத்தை ஓதினால் வந்து அண்ணிக்கின்ற தேனும் ஆவர். கு-ரை: மையறு - குற்றமற்ற. ஞானச்சோதியர் - அறிவாகிய ஒளியை உடையவர். ஆதியர் - தலையானவர். நாமத்தான் ஆன அஞ்செழுத்து - அவரது திருப்பெயரான திருவைந்தெழுத்து. அண்ணிக்கும் - இனிக்கும். தேனர் - தேனாயிருப்பவர். |