|
பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் கழல்கொண்ட சேவடியினர்; காலனைக் காய்ந்தருளியவர்; தழல் வண்ணம் கொண்ட செம்மேனியர்; வெண்ணீற்றுப்பொடியணிந்த அழகர்; கல்லால நிழற்கீழ் இருந்து அறம் ஓதிய குழகர் ஆவர். கு-ரை: தழல்கொள்மேனி - தழலின் நிறத்தைக்கொண்ட திருமேனி. சாந்தவெண்ணீறணி அழகர் - சந்தனம்போலத் திரு வெண்ணீற்றை அணிந்த அழகியர். ஆல் நிழற் கீழ் - கல்லால மர நிழலின் கீழ். |